Skip to main content
  • English
  • Bengali
  • Hindi
  • Malayalam
  • Tamil
  • English
  • Bengali
  • Hindi
  • Malayalam
  • Tamil
  • ஏன் தங்கம்
    • அனைத்து கட்டுரைகள்
    • முதலீட்டு
    • அணிகலன்கள்
    • வரலாறு & உண்மைகள்
  • எதை வாங்க வேண்டும்
    • All Products
    • தங்க கம்பிகள்
    • தங்க நாணயங்கள்
    • தங்க ஆதரவு ப.ப.வ.நிதிகள்
    • தங்க நாணயமாக்குதல் திட்டம்
    • இறையாண்மை தங்கப் பத்திரம்
    • தங்க நகை
    • Gold funds
    • Digital gold
  • நிபுணர் பேசுகிறார்
  • செய்திகளும் நடப்புகளும்
    • அனைத்து கட்டுரைகள்
    • முக்கியமில்லாத
    • ஃபேஷன் மற்றும் வாழ்க்கை
    • வேடிக்கையான உண்மை
    • புராணங்களில்
    • சந்தை வர்ணனை
  • ஹால்மார்க்
  • விலை
  • Glossary

Breadcrumb

  1. முகப்பு
  2. எதை வாங்க வேண்டும்
  3. தங்க நாணயமாக்குதல் திட்டம்
  • தங்கம் பார்கள்
  • தங்க நாணயங்கள்
  • தங்கம் ப.ப.வ.நிதிகள்
  • தங்க நாணயமாக்குதல் திட்டம்
  • இறையாண்மை தங்கம்
  • தங்க நகை
Gold Monetisation Scheme

தங்க நாணயமாக்குதல் திட்டம்

தங்கம் சேமிப்பு கணக்கு இது நீங்கள் தங்க வைக்கும் தங்கத்திற்கு வட்டியை ஈட்டும்.

இது எவ்வாறு செயல்படுகிறது?

  • அடிப்படை பரிசோதனைகள்:
    உங்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்ப்பது அவசியமாகவும், இப்போது இதை ஹால்மார்க் மையங்களில் செய்யலாம். உங்கள் தங்கத்தை ஹால்மார்க் மையங்களுக்கு நீங்கள் எந்த வடிவத்திலும் எடுத்துச் செல்லலாம், அவர்கள் உங்கள் முன்பே தங்கத்தை மதிப்பிட்டு தூய்மை குறித்தும் அதிலுள்ள தங்கத்தின் அளவு குறித்தும் உங்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்குவார்கள்.
  • தங்க சேமிப்புக் கணக்கு:
    உங்கள் தங்க சேமிப்புக் கணக்கை துவங்க இந்த சான்றிதழை நீங்கள் வங்கியில் கொடுக்கலாம். வங்கியில் கணக்கு துவங்க ‘உங்கள் வாடிக்கையாளளை அறிந்துகொள்ளுங்கள் (KYC)’ என்ற வழிமுறைகள் காணப்படும். டெபாசிட் செய்த தங்கத்திற்கு வங்கி உங்களுக்கு வருடாந்தர வட்டி செலுத்தும். நீங்கள் டெபாசிட் செய்யும் போதே பணமாக/தங்கமாக என்னவிதமாக மீட்க விரும்புகிறீர்கள் என்பதையும் வைப்பு காலத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் தங்கத்தின் மதிப்பில் வட்டியை பெறவும்:
    உங்கள் வைப்பு காலம் முடிந்ததும் வங்கி உங்கள் தங்கத்தின் எடையை கணக்கிட்டு 2% வட்டி வழங்கும். உதாரணமாக, நீங்கள் 100 கிராம் தங்கம் டெபாசிட் செய்திருந்தால், முதல் வருட இறுதியில் நீங்கள் 102 கிராம் தங்கத்தை பெறலாம்.
  • வைப்பு காலம் மற்றும் குறைந்தபட்ச மதிப்பு:
    உங்கள் தங்கத்திற்கான குறைந்தபட்ச வைப்பு காலம் ஒரு வருடமாகும் மற்றும் நீங்கள் ஒரு தங்க சேமிப்புக் கணக்கைத் துவங்க குறைந்தது 30 கிராம் டெபாசிட் செய்ய வேண்டும்.

இது எனக்குத் தானா?
தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தில் டெபாசிட் செய்வதில் பல நன்மைகள் உள்ளன:

  • தங்கத்தை பணமாக்குதல் திட்டம் உங்கள் லாக்கரில் உள்ள உங்கள் தங்க நகைகளுக்கு வட்டியை ஈட்டித் தருகிறது. உடைந்த நகைகள் அல்லது நீங்கள் அணிய விரும்பாத நகைகள் தங்கத்துக்கான வட்டியை உங்களுக்கு ஈட்டித் தரும்.
  • நாணயங்கள் மற்றும் கட்டிகள் அதற்கான மதிப்பு உயர்வு தவிர வட்டியையும் ஈட்டித் தரும்.
  • உங்கள் தங்கமும் வங்கியில் பாதுகாப்பாக பராமரிக்கப்படும்.
  • தங்கமாகவோ அல்லது ரூபாயாகவோ உங்கள் தங்கத்தை மீட்கலாம் எனவே நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு மேலும் சம்பாதிக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.
  • இதில் கிடைக்கும் வருமானங்களுக்கு மூலதன ஆதாய வரி, சொத்து வரி மற்றும் வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டெபாசிட் செய்த தங்கத்தின் மதிப்பில் ஏற்படும் உயர்வுகளுக்கு அல்லது அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு எந்த மூலதன ஆதாய வரியும் கிடையாது.

நான் அதை எவ்வாறு மீட்கலாம்?
வைப்பு காலத்தின் முடிவில், நீங்கள் அதை பொருட் தங்கமாக தேர்ந்தெடுக்கலாம் அல்லது அந்த நாள் தங்கத்தின் விலைக்கு சமமான பணத்தை தேர்ந்தெடுக்கலாம். திட்டத்தை தேர்வு செய்யும் போது ஆரம்பத்திலேயே உங்கள் விருப்பத்தை குறிப்பிட வேண்டும்.

முதலில் நான் ஏன் எனது தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும்?
தங்கத்தின் விலை உயர்ந்தால் லாக்கரில் உள்ள தங்கத்தின் மதிப்பும் உயர்கிறது, ஆனால் அது உங்களுக்கு ஒரு வழக்கமான வட்டி அல்லது இலாபப் பங்கீட்டை வழங்காது. மாறாக, நீங்கள் அதற்கான பராமரிப்புக் கட்டணங்களை (வங்கி லாக்கர் கட்டணம்) செலுத்த வேண்டும். பணமாக்குதல் திட்டம் உங்கள் தங்கத்தின் மீதான சில வழக்கமான வட்டிகளை ஈட்டித் தரும் மற்றும் பராமரிப்பு செலவுகளையும் சேமித்துத் தரும்.

  • ஏன் தங்கம்
  • முதலீட்டு
  • அணிகலன்கள்
  • வரலாறு மற்றும் உண்மைகள்
  • எதை வாங்க வேண்டும்
  • பார்கள்
  • நாணயங்கள்
  • ஈதீஎப்
  • தங்க நாணயமாக்குதல் திட்டம்
  • இறையாண்மை தங்கம்
  • தங்க நகை
  • Gold funds
  • Digital gold
  • செய்திகளும் நடப்புகளும்
  • முக்கியமில்லாத
  • ஃபேஷன் மற்றும் வாழ்க்கை
  • வேடிக்கையான உண்மை
  • புராணங்களில்
  • சந்தை வர்ணனை
  • மற்ற
  • விலை
  • ஹால்மார்க்
  • நிபுணர் பேசுகிறார்
  • தனியுரிமை கொள்கை
  • பயன்பாட்டு விதிமுறைகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
Footer section 5
எங்களை பின்தொடரவும்
  • facebook
  • twitter
  • youtube
  • instagram

Copyright © 2022 World Gold Council (India) Private Limited.